Oxford Dictionary-ல் இடம்… ஆதாருக்கு இப்படி ஒரு மவுசா?

Oxford Dictionary-ன் புதிய  பதிப்பில் 26 புதிய ஆங்கில வார்த்தைகள் இடம் பிடித்துள்ளது.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற Oxford பல்கலைக்கழகம் தொகுத்து வழங்கும் Oxford Dictionary-ன் 10வது புதிய பதிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

இதில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 26 ஆங்கில் வார்த்தைகள் புதிதாக இடம்பிடித்துள்ளன. அதில் இந்திய மக்களின் அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் ‘ஆதார்’ இடம் பெற்றுள்ளது. மேலும் Bus stand , non-veg, dabba, hartal, shaadi , chawl, videograph உள்ளிட்ட புதிய வார்த்தைகளும் இடம் பிடித்துள்ளது.

இந்த புதிய வார்த்தைகளில் 22 வார்த்தைகள் அச்சு பதிப்புகளிலும், 4 வார்த்தைகள் டிஜிட்டல் முறையிலும் இடம் பெற்றுள்ளது. Oxford Dictionary-ல்  மொத்தம் 384 புதிய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது.

இதனைத்தவிர 10வது பதிப்பில் 1000 புதிய வார்த்தைகள் புதிதாக இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version