சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சூரக்குடியில் இளவட்ட மஞ்சுவிரட்டுப்போட்டி கோலாகலமாக நடந்தது..
அருள்மிகு ஸ்ரீ ஐயனார், சிறைமீட்ட அய்யனார் ,படைத்தலைவி அம்மன் கோவில்களின் பொங்கல் விழா முன்னோட்டமாக இளவட்ட மஞ்சுவிரட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மார்கழி கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த மஞ்சுவிரட்டில் பங்கேற்க வைக்க ,பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன.
கிராமத்து இளைஞர்கள் பொதுமக்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பாரம்பரியமான கூட்டு வண்டியில் வைத்துக் கொண்டு வரப்பட்ட ஜவுளிகள் கிராமத்து அம்பலகாரர்கள் மூலமாக மஞ்சுவிரட்டு மாடுகளுக்கு பூட்டி அலங்காரம் செய்யப்பட்டன.
சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.10க்கும் மேற்பட்டோர் சிறுசிறு காயங்களுடன்
வெளியேறினர்.