கண்களால் நடனமாடி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த இளைஞன்

நடனமாடி மற்றும் பல்வேறு முகபாவனைகளை வெளிப்படுத்தி வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்த உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

வெளிநாட்டிற்கு தமிழக மக்கள் சுற்றுலா செல்வதை போல் இந்தியாவிற்கு தினத்தோறும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்திய பரம்பரியம் மற்றும் கலாச்சாராத்தை குறித்து தெரிந்துக்கொள்ள வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக ஒருவர் செயல்படுவார். அந்த வரிசையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கோவிலில் சுற்றுலா வழிகாட்டியாக பிரபு என்பவர், வெளிநாட்டினருக்கு கலாச்சாரத்தை விவரிக்கும் விதம் வைரலாகப் பரவி வருகிறது.

அதில் அவர் ஜீன்ஸ் படத்தில் இடம்பெறும் கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலில் தொடங்கி , பரதநாட்டிய நடனத்தின் பாவங்களை அழகாக நடனமாடி விளக்குகிறார். மேலும் அவர் ஆன்மீகத்திற்கு உரித்தான கிளி, மயில் பாவனை தொடங்கி தாமரை , சிவன் , மீனாட்சி நிற்பதை போல் தத்ரூபமாக நடனமாடியதை கண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பிரமித்து , கைதட்டி அவரைப் பாராட்டினர். அந்த இடத்தை பார்ப்பதற்கு மதுரை நாயக்கர் மஹால் போல் இருக்கிறது .தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Exit mobile version