அரியலூர் அருகே, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை, முகநூலில் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன், தமிழ் பாரம்பரிய முறைப்படி தமிழக இளைஞர் திருமணம் செய்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அண்ணங்காரன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன், சிங்கப்பூரில் மின் பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, முகநூல் வழியாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரியா என்கின்ற ரோனாஜென் என்ற இளம் பெண்ணை காதலித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இருவரும் அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோயிலில் தமிழ் பாரம்பரிய முறைப்படி, எளிமையாக திருமணம் செய்துகொண்டனர். மணமக்களை, உறவினர்களும், பொதுமக்களும் வாழ்த்தினர். இவர்கள் திருமணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.