மாட்டு சாணத்தை கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் இளைஞர்

இளைஞர் ஒருவர் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் நாட்டு மாட்டில் கிடைக்கும் சாணத்தை கொண்டு விநாயகர் சிலை தயாரித்து வருகிறார்

நாடு முழுவதும் செப்டம்பர் 2-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. எனவே, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் இரசாயன கலப்பில்லாத வண்ணங்கள் பூசப்பட்ட களிமண், கிழங்கு மாவு, மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசி கழிவுகள் போன்றவற்றில் இருந்தே சிலைகளை தயாரிக்க வேண்டும் என அரசு  உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகரை சேர்ந்த சங்கர் என்ற இளைஞர் நாட்டு மாட்டில் இருந்து கிடைக்கும் சாணத்தால் ஆன சிலைகளை செய்து வருகிறார் . சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மாட்டுச் சாணத்தில் சிலைகளை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version