நேரலையில் இருந்த நிருபருக்கு முத்தம் கொடுத்த இளைஞர்

நம் ஊரில் ஒளிபரப்பாகும் நேரலை செய்திகளில் பின்னால் இருந்து சில நபர்கள் செய்யும் செய்கைகள் பல சமயங்களில் சிரிப்பை ஏற்படுத்தும் அல்லவா..! இதேபோல் அமெரிக்காவில் நேரலையில் களத்திலிருந்து தகவல்களை வழங்கி கொண்டிருந்த நிருபருக்கு வாலிபர் ஒருவர் விளையாட்டாக முத்தம் கொடுத்த செயல் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள ‘Wave3’ என்ற தொலைக்காட்சியில் பணிபுரியும் சாரா ரிவெஸ்ட் என்ற பெண் நிருபர் செய்தி களத்திலிருந்து நேரலையில் தகவல்களை வழங்கி கொண்டிருந்தார். அப்போது வழக்கம் போல சாலையில் சென்ற சில இளைஞர்கள் பின்னால் நின்று வேடிக்கை காட்டினர். இதனையெல்லாம் சமாளித்தப்படியே தகவல்களை வழங்கினார் சாரா. ஆனால் எதிர்பாராத விதமாக குட்மேன் என்ற இளைஞர் சாராவுக்கு முத்தம் கொடுத்து ஓடி விட்டார். இந்த செயலை ஸ்டூடியோவில் இருந்த செய்தியாளரும் கண்டித்தார். இதனையடுத்து லூயிஸ்வில்லி மெட்ரோ காவல் நிலையத்தில், உடல் ரீதியான தொந்தரவு செய்ததாக குட்மேன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் தன் செயலுக்கு குட்மேன் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த வீடியோவை சாரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Exit mobile version