அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்றில், தாறுமாறாக கார் ஓட்டிய 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிகாகோவின் புறநகரான ஷாம்பர்க்கில் உள்ள Woodfield மாலில், கருப்பு நிற கார் ஒன்று தாறுமாறாக ஓடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், 22 வயது இளைஞரை கைது செய்தனர். விபத்து ஏற்படுத்திய காருக்குள், ஒரு இளைஞர் மட்டுமே இருந்துள்ளார். அவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் எந்தவொரு பயங்கரவாத செயலுடனும் தொடர்புடையது இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.