குக்கர் விசில் பறந்து கண்பார்வையை இழந்த பெண்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமையல் செய்யும் போது குக்கர் விசில் பறந்து பெண்ணின் கண்பார்வை பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ஹண்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சமைப்பதற்காக குக்கரில் பருப்பை வைத்துவிட்டு வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் குக்கர் விசில் பலமுறை அடித்தும் அவருக்கு சத்தம் கேட்கவில்லை. குக்கர் வைத்ததை மறந்து நீண்ட நேரத்திற்கு பிறகு சமையலறைக்கு வந்த அவர் குக்கரை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்துள்ளார்.

அப்போது திடீரென குக்கரின் விசில் பறந்து அந்தப் பெண்ணின் இடது கண் பகுதியைத் துளைத்து தலைக்குள் சென்றுள்ளது. இதனை தொடந்து அந்த பெண்ணை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது குக்கர் விசில் அவருடைய கண்ணிற்கும், மூளைக்கும் இடையே சிக்கிக் கொண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து தலையில் சிக்கியிருந்த விசில் நீக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அவர் தனது இடது கண் பார்வை இழந்துள்ளார்.

Exit mobile version