வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த பெண்

தேனியில் போலி தொண்டு நிறுவனம் மூலம் மகளிர் குழுக்களுக்கு வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தென்கரை அடுத்த தண்டுப்பாளையம் சாலையில் அருள் கிராம முன்னேற்றத் தொண்டு நிறுவனம் மற்றும் வேலை வாய்ப்பு மையம் என்ற பெயரில், போடியை சேர்ந்த அருள் செல்வி என்பவர் ஒரு நிறுவனத்தை நடந்தி வந்தார். இவர், 12 பேர் கொண்ட பெண்கள் குழுவை, அமைத்து முன்வைப்புத் தொகை செலுத்தினால், தனிநபர் கடனாக 1லட்ச ரூபாய் வரை வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக கூறி, 20-க்கும் மேற்பட்ட குழுக்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். ஒரு நபருக்கு 3 ஆயிரத்து 700 ரூபாய் வீதம் 200-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் பெற்ற அருள் செல்வி, அப்பெண்களுக்கு வங்கிக் கடன் பெற்றுத் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அவரது நிறுவனத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், அருள் செல்வியை கைது செய்து விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

Exit mobile version