ஆரோக்கிய இந்தியா திட்டத்தின் கீழ், நாள்தோறும் 10 ஆயிரம் அடிகள் நடந்து நடைபயிற்சி மேற்கொள்ளும் நிகழ்ச்சி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் விதமாக உயர்கல்வி நிறுவனங்களில், ஆரோக்கிய இந்தியா திட்டத்தின் கீழ் தினந்தோறும் 10ஆயிரம் அடிகள் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் என பல்கலைக் கழக மானியக் குழு வலியுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழக வளாகத்தில் நடைபெற்ற, ஆரோக்கிய இந்திய திட்டத்தின் நடைபயிற்சியை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தொடங்கி வைத்து கலந்து கொண்டார். இதில் பல்கலைக் கழக மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.