மொத்த வேட்புமனுக்களில் 932 மனுக்கள் ஏற்பு, 655 மனுக்கள் நிராகரிப்பு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 932 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், இடைத்தேர்தலில் 305 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், மொத்தமாக ஆயிரத்து 587 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அதில் 932 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் 655 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 43 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 10 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 18 தொகுதிகளில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மொத்தம் தாக்கலான 513 வேட்புமனுக்களில் 305 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 213 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் அதிகபட்சமாக பெரம்பூரில் 51 மனுக்களும், குறைந்தபட்சமாக குடியாத்தத்தில் 8 மனுக்களும் ஏற்கப்பட்டதாக சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.

Exit mobile version