செங்கோட்டை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 350 செல்போன்கள் மற்றும் 3 லட்சத்து 37 ஆயிரத்து 400 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம், கடையநல்லூர் ரயில் நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ததில், 350 செல்போன்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 1 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல செங்கோட்டை வனத்துறை அலுவலகம் முன்பு நடந்த வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 1 லட்சத்து 87ஆயிரத்து 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு செங்கோட்டை தாசில்தார் வெங்டாச்சலத்திடம் ஒப்படைக்கப்பட்டது.