இளம்பெண் காதலித்து ஏமாற்றிவிட்டதாக கண்ணீர் மல்க புகாரளித்த வாலிபர்

கோவையில், இளம்பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக, வாலிபர் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த இமானுவேல் என்பவர், ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னை இளம்பெண் ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், அவரது குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த இமானுவேல், நாங்கள் காதலித்தது அப்பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே, தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், சில நாட்களில், காதலித்த பெண்ணும் தன்னை ஏமாற்றியதால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Exit mobile version