பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகளின் அசத்தலான சாகச நிகழ்ச்சி

சென்னை பரங்கிமலை இராணுவ பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த இராணுவ அதிகாரிகளின் சாகச விழா நடைபெற்றது.

11 மாத கால இராணுவ பயிற்சி முடிந்த இராணுவ அதிகாரிகளுக்கு, பயிற்சி நிறைவு விழா நாளை நடைபெற உள்ளது. அதற்கான ஒருங்கிணைந்த சாகச நிகழ்ச்சி இன்று சென்னை பரங்கிமலையில் அமைந்துள்ள இராணுவ அதிகாரிகளின் பயிற்சி மையத்தில் நடைப்பெற்றது. பயிற்சியின் போது அவர்கள் மேற்கொண்ட குதிரை சவாரி, கலரிபயிட்டு, ஜிம்னாஸ்டிக் சாகசங்கள், மோட்டார் வாகன சாகசங்கள், வான்வழி சாகசங்கள் உள்ளிட்டவைகளை இன்று நிகழ்த்திக் காட்டினர்.

Exit mobile version