கொத்தடிமையாக படிப்பை தொடர முடியாமல் இருந்த மாணவி

கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட இருளர் இன மாணவி, நர்சிங் மேற்படிப்பு படிக்க திருண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வசித்து வருபவர் சடயன். இவரது மகள் சுகன்யா. 2012-ம் ஆண்டு திருவள்ளுர் மாவட்டம், செங்குன்றம் அருகில் பூச்சி அத்திப்பட்டு பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலையில் இருந்து சடையன் குடும்பத்தினர் மீட்கப்பட்டனர். 3 பிள்ளைகளை சுகன்யாவை பல்வேறு சிரமங்களுக்கிடையே 12 ஆம் வகுப்பு வரை அவர் படிக்க வைத்தார். நிதி வசதி இல்லாததால் மேல்படிப்பை தொடர முடியாமல் சுகன்யா கஷ்டப்பட்டார். இதுகுறித்து அறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, சுகன்யா நர்சிங் படிக்க உதவியுள்ளார். தனியார் நர்சிங் கல்லூரியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மூன்றாடுகள் நர்சிங் படிப்பினை எந்தவித கட்டணமும் இல்லாமல் சுகன்யா படிக்க மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்துள்ளார். இதையடுத்து தனது பெற்றோருடன் ஆட்சியரை சந்தித்த சுகன்யா வாழ்த்து பெற்றார். சுகன்யாவிற்கு புதிய துணி, இனிப்பு, பழங்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.

Exit mobile version