பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவனின் மேற்படிப்பு செலவிற்காக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே SS கோட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்த மாணவன் சண்முகவேல், 10ம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் பெற்றார். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர், ஜெயகாந்தன், மாணவனை ஊக்குவிக்கும் விதமாக, மேற்படிப்பு செலவிற்காக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சூரிய சக்தியுடன் கூடிய முதலமைச்சரின் பசுமை வீடுகளின் திட்டத்தின் கீழ், 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், மாணவனின் பெற்றோருக்கு வீடு கட்டி கொடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.