மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில், இரு ஊர்களுக்கிடையே நடைபெற்ற கல்லெறித் திருவிழாவில், கல்லெறிபட்டு 168 பேர் காயமடைந்தனர்.
பழங்காலத்தில், இனக்குழுக்கள் தங்களுக்குள் சண்டையிடும்போது தொலைவில் உள்ளவர்களைக் கல்லெறிந்து தாக்கினர். இரும்புக் கருவிகள், துப்பாக்கி என நாகரிக வளர்ச்சியில், புதுப்புது ஆயுதங்கள் புழக்கத்துக்கு வந்த பின்னரும், மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பந்தூர்ணா, சாவர்கான் ஆகிய ஊர்களில், பழங்கால வழக்கத்தை நினைவூட்டும் வகையில், ஆண்டுதோறும் கல்லெறி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இரு ஊர் மக்களும், இரு புறமும் நின்றுகொண்டு, எதிர்ப்புறத்தில் உள்ளவர்கள் மீது கல்லெறிந்தனர். இன்று நடைபெற்ற கல்லெறி விழாவில், இரு ஊர்களைச் சேர்ந்த 168 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக அப்புறப்படுத்தி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்றனர்.