பட்டாளம்மன் கோவில் ஐம்பொன் சிலை திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பட்டாளம்மன் கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போச்சம்பள்ளி அடுத்த வேலாவள்ளி கிராமத்தில் பட்டாளம்மன் கோயில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. காலை கோயிலுக்கு வழக்கம்போல் வந்து பார்த்த போது சட்டர் உடைப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சகர், உள்ளே சென்று பார்த்த போது, கருவறையில் இருந்த ஐம்பொன்னால் ஆன பட்டாளம்மன் சிலை, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த அரை சவரன் தாலி கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கிராமத்தினர் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version