காஞ்சிபுரம் கச்சபரேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

காஞ்சிபுரம் மாவட்டம் கச்சபரேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரத்தில் உள்ளஸ்ரீ கச்சபேஸ்வரர், மற்றும் ஏகாம்பரநாதர் கோயிலில் வருண யாகம் நடத்தப்பட்டது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இந்த யாக பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விவசாயம் செழிக்கவும், நல்ல மழை பெய்து நாடு செழிக்கவும் வேண்டிக் கொண்டனர்.

Exit mobile version