பழனி கோவிலுக்கு சென்ற எடப்பாடி பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு

பழனி முருகனுக்கு தைபூசம் நிறைவு பூஜையாக மயில் காவடியுடன் மாட்டுவண்டி கட்டியும், பாத யாத்திரையாகவும் சென்ற எடப்பாடி பக்தர்களுக்கு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுமார் 360 ஆண்டுக்கால பாரம்பரியமாக தைப்பூசம் நிறைவுநாள் மறுபூஜைக்காக சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காவடி சுமந்து யாத்திரையாக பழனிக்கு செல்வது வழக்கம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை வந்தடைந்த எடப்பாடி பக்தர்களுக்கு தாராபுரம் முருக பக்தர்கள் சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு மயில் காவடிகள் இறக்கிவைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து,  தாரை, தப்பட்டை முழங்க எடப்பாடி பக்தர்கள் புகழ்பெற்ற காவடி ஆட்டம் ஆடினர்.

Exit mobile version