திருவாரூரில் சரஸ்வதி கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை

விஜயதசமி இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, திருவாரூரில், உள்ள பிரசித்தி பெற்ற சரஸ்வதி கோவிலில், சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புலவர் ஒட்டக்கூத்தரால் வணங்கி வழிபாடு செய்யப்பட்ட சரஸ்வதி கோவிலில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று இக்கோவிலில் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டதை அடுத்து, விஜயதசமி நாளான இன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Exit mobile version