நாட்டுமாடுகளையும், இயற்கை நெல்களையும் பாதுகாக்கும் வகையில் சிறப்பு கண்காட்சி

அழிந்து வரும் நாட்டுமாடுகளையும், இயற்கை நெல்களையும் பாதுகாக்கும் வகையில் சிறப்பு கண்காட்சி பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த அணைக்காடு கிராமத்தில் தமிழர் பாரம்பரிய திருவிழாவின் இரண்டாமாண்டு கண்காட்சி நடைபெற்றது. இதில் அழிந்து வரும் நாட்டுமாடு வகைகளை பாதுகாப்பது குறித்து கண்காட்சி நடைபெற்றது. காங்கேயம், உம்பளச்சேரி, காங்ரேஜ், பூரணி, ஓங்கோல் உள்பட 20 வகையான நாட்டுமாடுகள், இந்த கண்காட்சியில் இடம் பெற்றன. பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து நாட்டுமாடுகள் கொண்டு வரப்பட்டன. நாட்டு மாடுகள் மட்டுமின்றி ஆடு, குதிரை, கோழிகளும் கண்காட்சியில் இடம் பெற்றன. இயற்கை நெல், இயற்கை உரங்கள், விதைகள், உள்ளிட்டவைகளும் கண்காட்சியில் இடம் பெற்றன.

Exit mobile version