மன்னார் வளைகுடாவின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில், தூத்துக்குடியில் அதிநவீன கடற்படை இயக்க தளம் உருவாக்கப்பட உள்ளதாக கடற்படை அதிகாரி அட்மிரல் கே.ஜே.குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை போர் நினைவு சின்னத்தில், இந்திய கடற்படையின் 48வது ஆண்டு தினத்தையொட்டி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடற்படை அதிகாரி அட்மிரல் கே.ஜே.குமார் கலந்து கொண்டு இந்திய கடற்படைக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அடுத்த 10 வருடத்திற்குள் 51 கப்பல்கள் இந்திய கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளதாகவும், அதில் 49 கப்பல்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
அதுமட்டுமின்றி, மன்னார் வளைகுடாவின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில், தூத்துக்குடியில் கடற்படையின் மூலம் அதிநவீன முறையில் கடற்படை இயக்க தளம் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.