உதகையில், கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே தலைகுந்தா பகுதியில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் கடுமையான குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை நேரங்களில் வாகனங்களில் நீர் பனியானது மழை பெய்தது போல் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் அடுத்த மாதம் குளிர்காலம் தொடங்கியதும் உறை பனியின் தாக்கம் அதிகமாக இருக்கக் கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதிகாலையில் பனி கடுமையாக இருப்பதால் புல் வெளிகள் வெண்கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கின்றன.