மலை கிராமத்தில் செல்ல பறவையாக வலம் வரும் ஒற்றை மயில்

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள மலைக் கிராமத்தில் தினந்தோறும் இரை தேடியும், இளைப்பாரவும் மயில் ஒன்று சுற்றி வருகிறது. தாளவாடி அருகே உள்ள திகினாரை மலை கிராமம், வனப்பகுதியை ஒட்டி உள்ளது. உணவு தேடி வரும் மயில்கள் தோட்டங்களில் உள்ள தானியங்களை தின்றுவிட்டு இரவு நேரங்களில் வனப்பகுதிக்குள் சென்று விடும். ஆனால் கடந்த சில தினங்களாக மயில் ஒன்று கிராம பகுதியில் சுற்றி வருகிறது.

கிராமத்தில் உள்ளவர்கள் அவ்வப்போது அரிசி, தானியங்கள் போன்றவற்றை கொடுத்து செல்ல பறவையாக அந்த மயிலை வளர்த்து வருகின்றனர். இந்த மயிலுடன் சிறுவர்கள் அச்சமின்றி விளையாடி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version