தேனி மாவட்டம் கம்பம் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கம்பம் மெட்டு பகுதியில் தொடர் காட்டுத் தீ பற்றி எரிந்து கொண்டுள்ளது. இந்த காட்டுத்தீயில் மலையில் இருந்த தேக்கு, படாக் மரங்கள் மற்றும் பல்வேறு மூலிகை செடிகள் தீக்கிரையாகியுள்ளன. தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, காட்டுமரங்களையும் காட்டு விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.