ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணிக்கு 3000 வீரர்கள் அழைப்பு

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்க 3 ஆயிரம் படை வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரீசன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளில், காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருகிறது. இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 1 லட்சம் பேர், வீடுகளை விட்டு வெளியேறும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 23 பேர் பலியாகி உள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காட்டுத் தீ காரணமாக தென் கிழக்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் வெப்ப நிலை 104 டிகிரியை கடந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரீசன், இதுவரை இல்லாத அளவுக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளதாகவும், காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு 3 ஆயிரம் படை வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Exit mobile version