முருகப் பெருமானுக்கு மயிலுக்கு மாற்றாக விமானத்தை வாகனமாக சிற்பி ஒருவர் வடிவமைத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் முருகன் வீதி உலா செல்ல ஏதுவாக மயிலுக்கு பதிலாக விமானத்தை வாகனமாக செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டததாக தெரிகிறது. இதையடுத்து நாச்சியார் கோயிலை சேர்ந்த விஜயகுமார் என்ற சிற்பி தனது பட்டறையில் 200 கிலோ எடையில் பித்தளையில் விமானத்தை தயாரித்துள்ளார். இந்த விமானத்தில் முருகப் பெருமான் அமர்ந்து வீதி உலா செல்ல ஏதுவாக சிறிய மேடை அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளார். ஐந்து பேர் கொண்ட சிற்பிகள் 2 மாத உழைப்பில் இந்த பித்தளை விமானத்தை தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.