சென்னை தாம்பரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பள்ளி மாணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை தாம்பரம் அருகே சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையில் இருந்த தடுப்பு கம்பிகளை சேதப்படுத்தியதுடன், முன் சென்ற 3 இருசக்கர வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில், கிளாட்சன் என்ற மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறுமுகம் மற்றும் சாந்தி இருவரும், சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்றுவருகின்றனர், விக்ரம் என்ற மாணவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், மற்ற மூவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றர்.
இந்நிலையில், காரை ஓட்டிவந்து விபத்து ஏற்படுத்தியது 18 வயது நிறைவடையாத பள்ளி மாணவன் என்பது போலீசாருக்கு தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய பள்ளி மாணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.