நேரம் காலம் பாராமல் வேறு இடங்களுக்கு பயணப்பட்டு வேலை செய்யும் மக்களுக்கு தெரியும் அதில் உள்ள கஷ்டம் என்னவென்று. சரியான நேரத்தில் பஸ்,ரயிலை பிடிக்கவில்லையென்றால் அன்றைய பாடு திண்டாட்டம் தான்.
சீனாவிலும் இதே நிலை தான். இங்குள்ள ஒரு ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் காலால் ரயிலை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது. சீனாவில் உள்ள கவுங்சூவ் என்ற இடத்திலுள்ள ரயில் நிலையத்திலுள்ள கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அங்கு வந்த ரயிலொன்று மீண்டும் புறப்படத் தயாரானது. அப்போது வேகமாக வந்த பெண் ஒருவர், அலுவலகத்துக்கு நேரமாகி விட்டதாக கூறி உள்ளே விடுமாறு அங்குள்ள அதிகாரிகளை கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் மறுக்கவே, சோதனை செய்யும் கேட்களை கடந்து ரயிலை நோக்கி ஓடியுள்ளார்.
சரியாக ரயில் புறப்படும் போது ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே தனது காலை வைத்து நின்று விட்டார். இதனால் ரயில் புறப்படாமல் அங்கேயே நின்று விட்டது. மிகுந்த சிரமத்திற்கிடையே அதிகாரிகள் அந்த பெண்ணை வெளியே இழுத்து கொண்டு வந்து கைது செய்தனர். விசாரணையில் அலுவலகத்திற்கு தாமதமாக செல்வதை தடுக்கவே இப்படி நடந்துக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
காணொளி காட்சியில் காண: https://www.youtube.com/watch?v=pUJO2GsGZEQ