சோம்பேறித் தனம் கொண்ட நாயின் சாதனை

சோம்பேறித் தனம் கொண்ட நாயே என திட்டிய முதலாளிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவை சேர்ந்த நாய் ஒன்று சாதனைப் படைத்துள்ளது, அந்த நாய் அப்படி என்ன சாதனை படைத்தது?

சோம்பேறித் தனம் என்பது பொதுவா எல்லார்கிட்டையும் இருக்கும், என்னதான் நாம சோம்பேறியா காணப்பட்டாலும் திடிர்னு ஒருத்தவங்க நம்மள பார்த்து ஏன் இப்படி சோம்பேறியா இருக்க, நீயெல்லாம் வாழ்க்கையில எங்க உறுப்பட போறனு கேட்டா, அப்டியே சுல்லுனு கோபம் வந்து..,எதாவது சாதிக்கனும், எனக்காக இல்லாட்டியும் என்ன கலாய்ச்சவன் மூக்கு மேல விரல வச்சு பார்க்குறதுக்காவது சாதிக்கனும்னு நம்ம உள் மனசு சொல்லும்.

இப்படிபட்ட கோபம் மனுசங்களுக்கு மட்டும்தான் தோனும்னு நீங்க நினைச்சிங்கனா அதுதான் தவறு ,இந்த மாதிரி கோபம் ஐந்தறிவு உள்ள மிருங்களுக்கும் தோன்றும். அட ஆமாங்க இங்க ஒரு சோம்பேறி தனமான நாய் , தனது முதாலாளிகிட்ட கோபப்பட்டு எதாவது சாதிக்கனும்னு நினைச்சி சாதனை படைச்சிருக்கு.

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் தனது முதாலாளியுடன் வசித்து வந்தது நம்ம ஹீரோவான லுடிவன் என்ற நாய்.இரண்டரை வயதான நம்ம ஹீரோவ ரொம்பவும் சோம்பேறியா வளர்ந்துருக்காங்க அந்த முதலாளி, கால போக்குல சாப்பிட்டு விட்டு தூங்குவதை மட்டுமே தன்னுடைய வேலையா செஞ்சிருக்கு நம்ம லுடிவன், அட என்னடா எப்போ பாரு இந்த நாய் தூங்கிட்டே இருக்குனு காண்டான முதலாளி நம்ம ஹீரோவ திட்டுறத வழக்கமா வச்சிருந்துருக்காரு.

ஒரு அளவுக்கு மேல பொருத்துகொள்ள முடியாத நம்ம ஹீரோ , எதாவது சாதிக்கனும்னு நினைச்சிருக்கு. ஒருநாள் தனது முதலாளி எப்பவும் போல திட்ட கோபத்துடன் வீட்டுக்கு வெளில போய் படுத்துருக்காரு நம்ம ஹீரோ. ஒரு பக்கம் மனசுல எதாவது சாதிக்கனும்னு நினைச்சிகிட்டே, தூங்கும்போது திடிர்னு ரோட்டுல மாரத்தான்விளையாட்டுக்காக வீரர்கள் எல்லாம் தயாராக இருந்துருக்காங்க , அத பார்த்ததும் இதுதான் சந்தர்ப்பம்னு மனிதர்களோடு சேர்ந்து தானும் ஓட ஆரமிச்சிருக்காரு.

இறுதியில முதல் இடத்தை பிடிக்காட்டியும் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து ஓடி அந்தப் போட்டியில் ஏழாம் இடத்துல இடம்பெற்றாரு நம்ம ஹீரோ. 13 மைல் தூரம் ஓடி சாதனை படைத்த நம்ம ஹீரோவுக்கு, அந்த மாரத்தான் ஓட்ட பந்தயத்தை நடத்திய நிறுவனம், பதக்கத்தை வழங்கி கௌரவித்தது.

அப்பறம் வழக்கம் போல, சமூக வட்டாரங்கள் நம்ம ஹீரோவ புகழ தொடங்குனாங்க, அப்புறம் என்னங்க நம்ம ஹீரோ ரியல் ஹீரோவாகவே மாறிட்டாரு. ஒரே பொண்ணுங்க பேண்ஸ், நம்ம ஹீரோக் கூட போட்டோ எடுத்துக்க அலை மோதினாங்க. சோம்பேறித் தனமான நம்ம ஹீரோவோட சாதனையை உலகமே அன்னாந்து பார்த்ததுந்தான் சொல்லனும்.

வீழ்வது வெட்கமல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கம் என்று விவேகானந்தர் கூறுவது போல, தன்னம்பிக்கையை தளரவிடாமல், சரியான பாதையில், குறைவில்லா சுறுசுறுப்புடன் செயல்படுபவர்கள் தனது லட்சியத்தை நிச்சயம் ஒரு நாள் அடைவார்கள்.

Exit mobile version