தருமபுரியைச் சேர்ந்த நிஜாமுதின் என்ற விவசாயி பாலைவனத்தில் மட்டுமே விளையக்கூடிய பேரீட்சையை, சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளார்.
மழைப்பொழிவு குறைவாக உள்ள பகுதிகளில், விவசாயத்தை சரிவர செய்ய இயலாமல் தடுமாறும் விவசாயிகளுக்கு பேரிட்சை சாகுபடி பெரிதும் உதவி வருகிறது. திசு வளர்ப்பில் வளர்க்கப்பட்ட பேரீட்சை செடிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து 35 வகையான பேரீட்சையை தனது தோட்டத்தில் சாகுபடி செய்துள்ளார்.
கடந்த 30 வருடங்களாக பேரிட்சை சாகுபடியில் ஈடுபட்டுள்ளதாகவும், மற்ற விவசாயங்களால் வருமானம் ஈட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு பேரீட்சை விவசாயம் கைகொடுக்கும் என்றும் நிஜாமுதின் தெரிவித்துள்ளார்.
பசுமை குடில்களில், திசு வளர்ப்பின் மூலம் வளர்க்கப்படும் பேரீச்சை செடிகளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் நிஜாமுதின் சப்ளை செய்து வருகிறார். தங்களுடைய பேரீச்சைக்கு, வாடிக்கையாளர்களால் அதிகளவு விரும்பப்படுவதாகவும் இதனால் தேவை அதிகரித்துள்ளதாகவும் நிஜாமுதின் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.