சீனாவின் ஹெபே மாகாணத்தில் 46 ஆயிரம் டன் எடை கொண்ட பாலம் சுழற்றி விடப்பட்டு அதன் இலக்கு நிலையில் நிறுத்தப்பட்டு சாதனை படைத்துள்ளது.
உலகத்தரம் வாய்ந்த பல பாலங்களை அமைப்பதில் சீனா ஸ்விவல் என்ற கட்டுமான முறையை பின்பற்றி வருகிறது. அந்த வகையில், வடக்கு சீனாவில் தலைநகர் பெய்ஜூங் ஹெபே மாகாணத்தில், போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள 46 ஆயிரம் எடை மற்றும் 263.6 மீட்டர் நீளம் கொண்ட ஸ்விவல் பாலம் செவ்வாய்கிழமை, அதன் இலக்கு நிலைக்கு சுழற்றப்பட்டது. இதில் 68 நிமிடங்களில், 52.4 டிகிரி கோணத்தில் சுழன்று பெய்ஜிங்-குவாங்சோ சாலையை இணைத்தது. இதன் மூலம் ரயில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏதுவாக அமைந்தது. இதன் கோள கீழானது சுழலும் பாகமான அச்சு பாலத்தை திருப்ப பயன்படும் முக்கிய உபகரணமாகும். இது 6.5 மீட்டர் அமைக்கப்பட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.