2ஜி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கும் நிலையில், அதுகுறித்து ஆ.ராசா பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் உள்ள ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், 5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற மீனவர்களின் வாரிசுகளுக்கு சேர்க்கை உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழை, சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆ.ராசாவின் தரமற்ற அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலை முதலமைச்சருக்கு இல்லை என்று தெரிவித்தார். தனது சொந்த செலவில் விவாதத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும், முதலில் வழக்கறிஞர் ஜோதியுடன் விவாதிக்க ஆ.ராசா வருவாரா எனவும் கேள்வி எழுப்பினார்.