காசிமேடு துறைமுகத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அபூர்வ வகையான திமிங்கலம்

சென்னை காசிமேடு துறைமுகத்தில், இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அபூர்வ வகையான திமிங்கலத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீனவர்கள் மீன்களை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட பணவாய் வகை திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதன் எடை சுமார் இரண்டு டன் இருக்கும் என்றும் இதன் நீளம் 20 அடி இருக்ககூடும் என்றும் கூறப்படுகிறது.

மீன்வளத் துறை சார்பாக, பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட இந்த மீன் நடுக்கடலில் கப்பலில் அடிப்பட்டு இறந்திருக்க வாய்ப்பு உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அரிய வகை திமிங்கலத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள், புகைப்படம் எடுத்தனர்.

Exit mobile version