அரிய வகை மான்கள் சத்தியமங்கலம் வனப்பகுதியில் திரிவதாக தகவல்

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த சத்தியமங்கலம் வனப்பகுதியில் கேளையாடு வகையை சேர்ந்த அரிய வகை மான்கள் அதிகம் காணப்படுவதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்….

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர் , கேர்மாளம், ஜீரகள்ளி, தலமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட ஏராளமான விலங்கினங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் சமீபகாலமாக அழித்து வருவதாக கூறப்பட்டு வந்த கேளையாடு வகையை சேர்ந்த மான்கள், வனப்பகுதியில் அதிகளவில் சுற்றித் திரிவதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து சாலையில் மான்கள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் சீரான வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Exit mobile version