ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் கிராமத்தில் நாகூர் ஆண்டவரின் சந்தனக் கூடு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்பாக கொடிமரம் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து காக்கூருக்கு அருகிலுள்ள கதையன் கிராமத்தில் கூடு பொருத்தப்பட்டு முக்கிய கிராமங்கள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பேரிச்சம் பழம், சர்க்கரை, ஊதுவத்தி ஆகியவற்றை கொண்டு வழிபாடு நடத்தினர். பக்தர்கள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் விபூதி வழங்கப்பட்டது. அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்ட இந்தத் திருவிழா மத நல்லிணக்கத்திற்கு சான்றாக விளங்குவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.