குலாப் ஜாமுன் சாப்பிட்டே 11 கிலோ எடையை கூட்டிய பிரபல நடிகர்..

பாலிவுட்டில் மிகவும் பிசியாக வலம் வருபவர் தீபிகா படுகோன்.இவர் தற்போது ‘சபாக்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மி அகர்வாலுக்கு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் தீபிகா படுகோனுக்கு ஜோடியாக விக்ராந்த் மஸாய் நடித்துள்ளார்.இவர் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக இருப்பார்.ஆனால் இந்த படத்தில் நடிக்க வேண்டுமென்றால் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.உடனே உடல் எடையை எப்படி அதிகரிப்பது என சில மருத்துவர்களிடம் ஆலோசித்துள்ளார்.

ஆனால்  சமோசாவும், குலாப் ஜாமுனும் தான் இவருக்கு உதவியுள்ளது. 2 மாதத்தில்  64 கிலோவிலிருந்த விக்ராந்த், 11 கிலோ அதிகரித்து 75 கிலோவாக எடையை அதிகரித்துள்ளார்.அதற்கு பின்பு தான் அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமிட்டுள்ளார்.குலாப் ஜாமுன் சாப்பிட்டு இவ்வளவு எடை அதிகரிக்க முடியுமா என இணையதள வாசிகள் வியந்துள்ளனர்.

மேலும்,’சபாக் ‘திரைப்படம்  ஜனவரி 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Exit mobile version