ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சார் ஆட்சியர் என்று பொய் சொல்லி திருமணம் செய்த நபர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, சார் ஆட்சியர் என்று ஏமாற்றி, 120 சவரன் வரதட்சனை பெற்று திருமணம் செய்து, மேலும் கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் புலிகுத்தி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த பாண்டிச்செல்வி என்ற பெண்ணை, தான் ஒரு சார்-ஆட்சியர் என்று ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.அப்போது, வரதட்சனையாக 120 சவரன் நகைகளை பெற்றதோடு,மேலும் 8 லட்ச ரூபாய் கேட்டும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாரியப்பன் ஒரு சார்-ஆட்சியர் இல்லை என்ற உண்மை தெரிந்த பெண்ணின் குடும்பத்தார், ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதைத்தொடர்ந்து, மாரியப்பனை கைது செய்த போலிசார், இதற்கு உடந்தையாக இருந்த குடும்பத்தினர் நால்வரையும் தேடி வருகின்றனர். இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version