அமெரிக்காவில் இயந்திர கோளாறால் கடலுக்குள் விழுந்த விமானத்தில் இருந்த பயணி ஒருவர் தான் கடலுக்குள் விழுந்ததையும் பொருட்படுத்தாமல் அனைத்து காட்சிகளையும் செல்ஃபி வீடியோவாக எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ அருகே உள்ள ஹாப்மூன் வளைகுடா ((HalfMoon Bay)) பகுதியில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் கடலுக்குள் விழுந்தது. இதனால் விமானத்திலிருந்த 4 பயணிகளும் கடலுக்குள் மூழ்கித் தத்தளித்தனர். இந்த நிலையில் தண்ணீருக்குள் விழுந்த டேவில் லேஷ் என்ற இளைஞர் விமானம் விபத்திற்குள்ளானதையும், மீட்பு படையினர் அனைவரையும் காப்பாற்றுவதையும் செல்ஃபி வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் மீட்க்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் டேவிட் லேஷ் விபத்து நடக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டேவிட்டின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.