கூலிப்படைக்கு ஜாமின் எடுக்கும் ஒரே கட்சி திமுக தான் என தர்மபுரி டவுனில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் பழனிசாமி குற்றம் சாட்டினார். ஸ்டாலின் பச்சோந்தி போன்று, தமிழகத்தில் ஒரு பிரதம வேட்பாளரையும், பிறமாநிலங்களுக்கு செல்லும் போது வேறு விதமாக பேசுவாதக அவர் சாடினார்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், அரூர் சட்டமன்ற தொகுதியில் சம்பத்குமார், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கோவிந்தசாமியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.