800 விசைப் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 4 ஆயிரம் பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 28-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை 4 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், ஒரு படகையும் மூழ்கச் செய்தனர். இந்தச் சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இலங்கையின் இந்த கொடூரச் செயலைக் கண்டித்தும், சிறையில் உள்ள 4 மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், அங்குள்ள 800 விசைப்படகுகள் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் யாரும் இல்லாததால், மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

 

Exit mobile version