கதிர்வீச்சு மூலமாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டினால், அதை முறியடிப்பதற்காக புதுவித கருவி சென்னை மாநகர காவல்துறையின் ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
MRDS எனப்படும் மொபைல் ரேடியேசன் டிடெக்சன் சிஸ்டம் என்ற கருவியானது சென்னை மாநகர காவல்துறையின் ரோந்து வாகனங்களில், தற்போது புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் புதிய கண்டுபிடிப்பில் உருவாக்கப்பட்ட இந்த இயந்திரம் முதல் முறையாக சென்னை காவல்துறையில் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. பயங்கரவாதிகள் அணு கதிர்வீச்சு மூலமாக நாச வேலைகளில் ஈடுபட்டால், அது உடனடியாக இந்த கருவியின் முலம் தெரிய வரும். அதை தொடர்ந்து, அவசர அலாரத்தின் ஒலி பாபா அணுசக்தி நிலையத்திற்கு ஒலிக்கும், உடனடியாக சம்பந்தப்பட்ட இடங்களில் நாசவேலையை முறியடிக்க முடியும்.