பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கு, டிஜிகாப் என்ற புதிய செயலியை, சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அறிமுகப்படுத்தினார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டிஜிகாப் என்ற புதிய செயலியை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த செயலி மூலம், பொதுமக்கள், வாகன திருட்டு உள்ளிட்ட பல்வேறு புகார்களை பதிவு செய்யலாம். இதைத் தொடர்ந்து, சி.சி.டி.வி கேமரா அமைப்பதன் அவசியம் குறித்த குறும்படத்தின் குறுந்தகடும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செயலியை பதிவிறக்கம் செய்ய – DIGICOP – by Tamil Nadu Police