40 வயதில் ஏற்படும் மாரடைப்பை 20 வயதிலேயே கண்டறியும் புதிய மருத்துவ முறை

40 வயதுக்கு மேல் ஏற்படும் மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பை 20 வயதிலேயே கண்டறியும் விதமான புதிய தொழில் நுட்பத்தை அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர். உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் 40 வயதிற்கு மேல் ஏற்படும் மாரடைப்பை 20 வயதிலேயே கண்டறியும் புதிய முறையை அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் பிரபலமடைந்து வரும் மருத்துவ முறையாக இது உள்ளது. நவீன யுகத்தில் மைல் கல்லாக இருக்கும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் மாரடைப்பை தவிர்க்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எலக்ரோ கார்டியோகிராம் அதாவது இசிஜியுடன் இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி குறைந்த செலவில் மாரடைப்பு மற்றும் இதய செயலழிப்பை முதலிலேயே கண்டறிந்து தடுக்க முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் முன்னோடி கருதப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version