அச்சம்…மடம்…நாணம்…என அனைத்தையும் அவிழ்த்து வைத்து விட்டு ஆபாச ஆலாபனை!

புது வரவான கிளப் ஹவுஸ் app ஐ கிளுகிளுப்பான தளமாக மாற்றி டிக்கிலோனா விளையாடிக் கொண்டு இருக்கிறது 2k கிட்ஸ் பட்டாளம். 20 க்கும் மேற்பட்ட 18+ குரூப்கள்… எல்லை மீறும் ஆபாச உரையாடல்கள்.. இரவுக்கு மேல் என்ன தான் நடக்கிறது கிளப் ஹவுஸில்….?

 

அச்சம்…மடம்…நாணம்…என அனைத்தையும் அவிழ்த்து வைத்து விட்டு ஆபாச ஆலாபனை நடத்தும் இந்த மன்மத மொட்டு, ஒரு அக்மார்க் 2k கிட்.

இன்ஸ்டா, பேஸ்புக் போன்ற டேட்டிங் APP களின் வரிசையில் அடுத்த UPDATE ஆக வந்துள்ள ‘கிளப் ஹவுஸ்’ APP ல் தான் இது போன்ற சகிக்க முடியாத சாமக் கூத்துகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.

பாடுவது, பேசுவது, விவாதிப்பது என அப்பாவி 90-ஸ் கிட்ஸின் செயல்பாடுகளால் பகல் நேரத்தில் ஊடரங்கு சாலைகளை போல காற்று வாங்கும் ஹவுஸ் கிளப் குழுக்கள், இரவுக்கு பிறகு பார்ட்டி ஹாலாக களைகட்ட தொடங்கி விடுகிறது.

உபயம்… வேறு யார்..? கவலை என்பதன் பொருளே அறியாமல் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் 2K கிட்ஸ் தான்.

”MY WIFE IS YOUR WIFE” என்று ஒரு குழு.

சரியாக இரவு 10 மணிக்கு பிறகுதான் இவர்கள் கடையே திறக்கிறார்கள்.

சில நொடிதான் தாமதம் 1000 க்கும் மேற்பட்ட PORN பக்தர்கள் ஜோதியில் ஐக்கியமாக முண்டியடிக்கிறார்கள்.

இந்த குழுவில் நள்ளிரவு 3 மணி கடந்தும் களைகட்டுகிறது கடலை வியாபாரம்.

பச்சை நிறமே வாய் பிளக்கும் அளவிற்கு டபுள் மீனிங் அந்தாக்ஷரி நடத்துகிறார்கள்.

நேரம் செல்ல செல்ல ஹஸ்கி வாய்ஸில் மூழ்கி முத்துக்குளிக்க தொடங்கி விடுகிறார்கள் காஜி கண்மணிகள்.

கைலாசா LIVE வை போல தினந்தோறும் ராத்திரியில் அரங்கேறும் இவர்களின் ரகசிய கச்சேரியில் எதற்கும் சென்சார் இல்லை.

இந்த குழு மட்டுமல்ல….F TV டிவி புரொடியூசர்களே ஏக்கம் கொள்ளும் அளவிற்கு இன்னும் பல குழுக்கள் கிளப் ஹவுஸில் நைட் வாக் வருகின்றன.

கொஞ்சம் அரட்டை….நிறைய கெட்ட வார்த்தை…என ஒவ்வொரு குழுவும் ஆக கடைந்தெடுத்த ஒரு மினி பார்ன் சைட்.

ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இந்த அந்தரங்க வகுப்பிற்கு ஆர்வத்தோடு ஆஜராகி விடுகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் 6 மணி நேரத்திற்கு மேல் நடைபெறும் ஆபாச அரங்கேற்றத்தை தொகுத்து வழங்குவதும், அதனை சுவாரஸ்யம் குன்றாமல் பார்த்துக் கொள்வதும் லெக்கின்ஸ் லீடர்ஸின் பணிதான்.

அடெல்ட் உரையாடல் என்ன தவறு என சிலர் கிளப் ஹவுஸ் உரையாடலுக்கு ஆதரவு தெரிவிப்பதை பார்க்க முடியாது.

ஆனால் அடலெட் என்பது வேறு ஆபாசம் என்பது வேறு.

அந்த வகையில் அலசி ஆராய்ந்தால் கிளப் ஹவுஸ் முற்றத்தில் அதிகமாக தேங்கி நிற்பது சந்தனத்தை விடவும் ஆபாச சாக்கடைதான்.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக ராம்குமார்…

Exit mobile version