வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது! : இந்திய வானிலை ஆய்வு மையம்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகாவில் மிக கனமழையும், ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மீனவர்கள் 4 நாட்களுக்கு அந்தமான், நிக்கோபார் கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version