செங்கம் அருகே விவசாயி ஒருவர், இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார். திருவண்ணமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பழைய குயிலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி, இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி செய்து வருகிறார். தனக்கு சொந்தமான கால்நடைகளின் சாணங்களை சேகரித்து, அதில் இயற்கை உரம் தயாரித்து பயன்படுத்தி வருகிறார்.
செங்கம் சுற்றுப் பகுதிகளில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், விவசாயிகள் யாரும், பாப்பாளி பயிரிடாத நிலையில், ஓசூர், பெங்களூர், சென்னை ஆகிய பகுதிகளிலிருந்து வியாபாரிகள் இவரது தோட்டதிற்கு வந்து பப்பாளி பழங்களை கிலோ ஒன்றுக்கு 15 முதல் 25 வரை வாங்கி செல்வதால், நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயி சுப்பிரமணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.