நாடு முழுவதும் தொடங்கியது ”பூஸ்டர் டோஸ் தடுப்பூசி” செலுத்தும் திட்டம்

நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கும் மேற்பட்ட இணை நோயாளிகள் உள்ளிட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் 5 கோடியே 75 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள தகுதி பெற்றிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இவர்களில் ஒரு கோடி பேர் சுகாதார பணியாளர்கள் என்றும் 2 கோடி பேர் முன்களப் பணியாளர்கள் என்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகளாக 2 கோடியே 75 லட்சம் பேர் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு ஏப்ரல் மற்றும் அதற்கு முன் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தற்போது பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்ய தேவையில்லை என்றும் அருகாமையில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

Exit mobile version