தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க பல கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கவுந்தப்பாடியில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டத்தில், 4 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய குழாய்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இத்திட்டத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் துவங்கி வைத்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகக் கூறினார். அதேபோல், பிளாஸ்டிக் குப்பைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணிகளும் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version